நாடி ஜோதிடம்
பகுதி 1

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
                இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

                இவர்களில் பலர் முனிவர்களாகவும்,¡¢ஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச ்சென்றனர்.

                அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.
                அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"
                அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

                ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

                ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ¡¢ஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

                குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர்,பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

                தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.
              "கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

                நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

                தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின.  தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

                இப்போது சிறிது "Theory" (Want to skip?)
                பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

                ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

                                      "பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
                                        சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
                                        ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
                                        வேறெண்ண வேண்டாஞ் சுளை".

                ('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).
                பலாப்பழத்தி காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை  ஆறால்  பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் ருக்கும் சுளையின் எண்ணிக்கை.
                இப்போது ஒரு சந்தேகம்.
                சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள ்தோன்றினவா?
                அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

                விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில ்இயங்குகின்றனவா?

                காரணத்தின் விளைவாகக் கா¡¢யமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு  முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

                மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின்  போக்கில் அந்தக்  காரணங்கள்  ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

                துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

            நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

            மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க  முடியாதது; வேறு வழியில்லை.

            "அவனுடைய இறப்பு எனப்படும்   'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி,  காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?

   காற்று வந்ததும் கொடியசைந்ததா?

                ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

                அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

                இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும ்நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று  தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

                இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

                இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட,  நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play
dice with the Universe", என்று Einstein கூறினார்.

                காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

                இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

                இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.
                ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


NEXT

RETURN TO MAIN MENU